கேரள முதல்வர் பினராயி விஜயன், 'ReCode Kerala 2025' கருத்தரங்கில், 'விஷன் 2031' திட்டத்தின் கீழ் ஐ.டி துறைக்கான பிரம்மாண்ட இலக்குகளை அறிவித்தார்.
2031-க்குள் 5 லட்சம் புதிய உயர்தர வேலைவாய்ப்புகள் மற்றும் உலகளாவிய திறன் மையங்களில் 2 லட்சம் பேருக்கு பணி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஐ.டி சந்தையில் 10 சதவீத பங்கை கைப்பற்றுவது மற்றும் GCCகளின் எண்ணிக்கையை 120 ஆக உயர்த்துவதும் நோக்கம்.
ஐ.டி உள்கட்டமைப்பை 3 கோடி சதுர அடிக்கு விரிவாக்கம் செய்ய நில பங்கீட்டு மாதிரி மூலம் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்படும். தரவு மையங்கள் மற்றும் செயற்கைக்கோள் ஐ.டி பூங்காக்கள் உருவாக்கப்படும்.
கேரளா செயற்கை நுண்ணறிவு இயக்கம், கேரளா குறைக்கடத்தி இயக்கம் போன்ற புதிய அமைப்புகள் மூலம் புத்தாக்கங்கள் ஊக்குவிக்கப்படும்.
2016-இல் 300 ஆக இருந்த ஸ்டார்ட்அப்கள் எண்ணிக்கை தற்போது 6,400 ஆக உயர்ந்துள்ளது. ஐ.டி ஏற்றுமதி ரூ. 1 லட்சம் கோடிக்கு அருகில் உள்ளது.