பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் நுழைவார்கள் என எதிர்பார்த்தப்படியே 3 போட்டியாளர்களின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9 தொடங்கியதில் இருந்தே இன்ஸ்டா பிரபலங்களை வைத்து பிக்பாஸ் நடத்தும் அளவிற்கு பிக்பாஸ் பிரபலம் குறைந்துவிட்டதா என்ற ரீதியில் கேள்விகள் எழுந்து வந்தன. கடந்த சீசன்களில் பல முக்கிய நடிகர்கள் இருந்த நிலையில், இந்த சீசனில் சொல்லிக் கொள்ளும்படியாக யாரும் இல்லை என ஆடியன்ஸ் இடையே கருத்து நிலவி வந்தது
அதுமட்டுமல்லாமல் வீட்டில் இருப்பவர்களுமே டாஸ்க்கை சரியாக புரிந்துக் கொள்ளாமல், எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டு சுவாரஸ்யமே இல்லாமல் செய்கிறார்கள் என்பதை விஜய் சேதுபதியே கடந்த வாரம் வெளிப்படையாக சொன்னார். இந்நிலையில்தான் இந்த வாரம் வைல்ட் கார்ட் எண்ட்ரி நடக்க உள்ளது.
ஆடியன்ஸ் மன வருத்தத்தை போக்கும் வகையில் கண்ணுக்கு தெரிந்த பிரபலங்கள் களம் இறங்குகின்றனர். அதன்படி நடிகை சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ், ப்ரஜின் பத்மநாபன் ஆகியோர் இந்த வாரம் உள்ளே செல்கின்றனர்.
ப்ரஜின் 90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியலான காதலிக்க நேரமில்லை தொடங்கி பல சீரியல்களில் நடித்தவர். திவ்யா கணேஷ் அன்னம், மகாநதி, செல்லம்மா, பாக்கியலட்சுமி என மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் நடித்தவர். இதனால் இவர்களது வருகைக்கு பின்னராவது பிக்பாஸ் சுவாரஸ்யமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உள்ளே விளையாடுபவர்களின் தவறுகளை தட்டிக் கேட்க போவதாகவே ப்ரஜின் ப்ரோமோவில் பேசியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Edit by Prasanth.K