டெல்லி, பட்டர் கஞ்சி தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ அரவிந்தர் சிங் லவ்லி, சமீபத்தில் யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த விழாவின் போது, விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் ஒரு ரீல்ஸ் வீடியோ பதிவு செய்ய அவர் முயன்றார். ஆற்றுக்குள் சென்று, பாட்டிலில் தண்ணீர் பிடித்து குடிக்கும் காட்சியை பதிவு செய்ய முயற்சித்தபோது, ஆற்றுக்கரையோரம் நின்ற அவர் எதிர்பாராதவிதமாக தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் விரைந்து செயல்பட்டு, எம்எல்ஏ-வை பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ, விழிப்புணர்வு ரீல்ஸ் எடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததைக்காட்டுவதோடு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.