செஸ் போட்டியில் தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுராவை இந்திய வீரர் குகேஷ் கையாண்ட விதம் வைரலாகியுள்ளது.
பிரபல இந்திய செஸ் வீரரான குகேஷ் உலக செஸ் சாம்பியனாகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த செஸ் போட்டியில் குகேஷும், அமெரிக்க செஸ் வீரரான ஹிகாரு நகமுராவும் மோதிக் கொண்டனர். இந்த விளையாட்டில் குகேசை நகமுரா வீழ்த்தி வெற்றி பெற்றார். அதை கொண்டாடும் விதமாக குகேஷின் ராஜா காயை எடுத்து ஆடியன்ஸிடம் வீசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தினாலும், செஸ் போட்டிகளில் இது அனுமதிக்கப்பட்ட ஒன்று என செஸ் விளையாட்டு நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் அதே நகமுரா - குகேஷ் தற்போது அமெரிக்காவில் நடைபெறும் க்ளட்ஸ் செஸ் போட்டியில் கலந்துக் கொண்டனர். ரேபிட் முறையில் இருவரும் நேற்று மோதிக் கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இதில் நகமுராவை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். ஆனால் அந்த வெற்றியால் நகமுரா போல ஆக்ரோஷமாக செயல்படாமல், அமைதியாக புன்னகைத்தபடி நகமுராவுடன் கைக்குலுக்கி விட்டு வெற்றிப் பெற்றார்.
தோல்வியில் துவளவும் கூடாது, வெற்றியில் ஆணவம் அடையவும் கூடாது என்ற பாடத்தை நகமுராவுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார் குகேஷ். அவரது இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.
Edit by Prasanth.K