புற்றுநோய் என்பது செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஆகும். இது மரபுரீதியாகவோ அல்லது வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாகவோ ஏற்படலாம் என புற்றுநோய் சிறப்பு மருத்துவர் கென்னி ராபர்ட் தெரிவித்துள்ளார்.
மார்பகப் புற்றுநோய் பொதுவாக வலி இல்லாத கட்டியாகவே அதாவது நெல்லிக்காய் அளவில் தொடங்கும். இது ஹார்மோன் சமநிலை குலைவதால் உருவாகிறது. 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சுய பரிசோதனை செய்வது அவசியம். 40 வயதுக்கு மேற்பட்டோர் மேமோகிராம் சோதனை மூலம் கட்டியின் வகையை உறுதிப்படுத்தலாம்.
பொதுவாக, இரத்தப் பரிசோதனையை மட்டும் வைத்து ஆரம்ப நிலையில் புற்றுநோயை கண்டறிய முடியாது. CA-125 போன்ற சோதனைகள் கண்காணிப்புக்குப் பயன்படுகின்றன.
புற்றுநோயை தவிர்க்க, 8 மணி நேரத் தூக்கம், சரியான எடையைப் பராமரித்தல், மற்றும் புகை, ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்ப்பது அவசியம். கர்ப்பப்பைவாய் புற்றுநோயை தடுக்க அரசு வழங்கும் தடுப்பூசியை 9-14 வயதில் செலுத்தலாம்.