பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் நவம்பர் மாதம் தொடங்கப்பட உள்ள 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி' (SIR ) என்ற நடவடிக்கைக்கு பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'இது வாக்காளர் உரிமைகளை பறிக்கும் சதி' என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. 'SIR' சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பார்ப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். பீகாரில் இது ஏற்கெனவே நடந்திருப்பதை சுட்டிக் காட்டிய அவர், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த 'SIR' நடவடிக்கையை "ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால்" என்று விமர்சித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே அவசரமாக இதை செய்வது கவலையளிக்கிறது என்றும், ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநில தேர்தல்களை மனதில் வைத்து ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படலாம் என்ற அச்சமே இந்த எதிர்ப்புக்கு காரணமாகும்.