விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி பகுதியில் தெருநாய்களின் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விவரங்களின்படி, கடந்த 19 மாதங்களில் சிவகாசி அரசு மருத்துவமனையில் மட்டும் 2,959 பேர் தெருநாய் கடியால் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த எண்ணிக்கை, மற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றவர்களின் விவரங்களை சேர்க்கவில்லை. மருத்துவமனை தலைமை மருத்துவர், முன்பு மாதத்திற்கு சிலரே வந்த நிலையில், தற்போது நாள்தோறும் தெருநாய் கடிக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகள் தெருநாய் கருத்தடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தவறுவதே இச்சிக்கலுக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிரந்தரமான கருத்தடை திட்டத்தை அமல்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.