Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

Advertiesment
Gold Price Today

Prasanth K

, புதன், 29 அக்டோபர் 2025 (10:01 IST)

நேற்று ரூ3 ஆயிரம் வரை விலை வீழ்ச்சி அடைந்த தங்கம் இன்று சற்று விலை வேகமாகவே உயர்ந்துள்ளது.

 

உலகளாவிய பொருளாதார காரணங்களால் விலையில் சடுகுடு ஆடி வரும் தங்கம் கடந்த 21ம் தேதி வரலாற்று உச்சமாக சவரன் ரூ.96 ஆயிரத்தை தொட்டது. ஆனால் மறுநாளே கிடுகிடுவென வீழ்ச்சியை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

 

வார இறுதியில் 22 காரட் ஆபரண தங்கம் ரூ.92 ஆயிரமாக இருந்த நிலையில் திங்கட்கிழமை சற்று குறைந்து ரூ.91,600 ஆக விற்பனையானது. ஆனால் நேற்று யாருமே எதிர்பார்க்காத ஆச்சர்யமாக காலை, மாலை என இரண்டு நேரமும் விலைச்சரிவை சந்தித்த தங்கம் ஒரே நாளில் ரூ.3000 குறைந்து ரூ88,600 ஆக விற்பனை ஆனது. இது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. நேற்றைய நிலவரத்தோடு ஒப்பிடும்போது இன்று 22 காரட் சவரனுக்கு ரூ.1080 உயர்ந்து ரூ.89,680 ஆக விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,210 ஆக விற்பனையாகி வருகிறது.

 

வெள்ளி விலை நேற்று திடீரென ரூ.5 வீழ்ச்சி அடைந்து கிராம் ரூ.165 க்கு விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.166 ஆக விற்பனையாகி வருகிறது.

 

தங்கம் விலை மீண்டும் உச்சத்தை அடையுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் பொருளாதார நிபுணர்கள் தங்கம் விலை அடுத்த சில மாதங்களுக்குள் வீழ்ச்சியும், எழுச்சியுமாக இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது 2028 வரை கணிசமாக விலை உயர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 வாரம் லீவு எடுத்த மழை! அப்புறம் தொடங்கப்போகும் அதிரடி!