Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுப்பட ஷீட்டிங்கில் தனுஷ் …டுவிட்டரில் ஹேஸ்டேக் டிரெண்டிங்

webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (21:42 IST)
நடிகர் தனுஷ் தற்போது அந்தராங்கே மற்றும் கர்ணன்  ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் இன்று ஷூட்டிங்கின்போது, எடுத்த புகைப்படம் வைரலானதை அடுத்து, தனுஷ் பெயரில் இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் கர்ணன்.

சமீபத்தில் கொரொனா கால லாக்டவுன் முடிந்ததும் இப்படத்திற்கு கிளைமேக்ஸ் காட்சி படம் பிடிக்க வேண்டியதிருந்தது. இதற்காக பிரம்மாண்டமாக பல வீடுகள் கொண்ட செட் ஒன்று போடப்பட்டுள்ளது, கதைப்படி கிளைமேக்ஸில் அந்த குடிசைகள் அனைத்தும் கொளுத்தப்பட்டு 500 க்கும் மேற்பட்ட நடிகர்களைக் கொண்டு படமாக்க இயக்குனர் மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது அந்த செட்கள் அனைத்தும் அழிந்து போய்விட்டதால் மீண்டும் அங்கே செட் அமைக்கும் பணிகளைத் தொடங்கலாம் என படக்குழு சென்றபோது மக்கள் கொரோனா பயத்தால் மக்கள் படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லையாம். இதனால் தனுஷ் இப்போது, சென்னையிலேயே செட்டை அமைத்து படத்தை எடுக்கலாம் என தனுஷ் சொல்ல இப்போது தாணுவுக்கு இரட்டை செலவாகியுள்ளதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், இன்று கர்ணன் பட ஷூட்டிங்கின்போது, எடுக்கப்பட்ட தனுஷ் புகைப்படம் ஒன்று வைரலானது. பின்னர், தனுஷ் பெயரில் இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

புற்றுநோயால் பாதித்த நடிகர் தவசி காலமானார்… திரையுலகினர் ரசிகர்கள் அதிர்ச்சி