இந்த ஆண்டு மோகன்லால் நடிப்பில் எம்புரான், துடரும், மற்றும் ஹ்ருத்யபூர்வம் ஆகிய படங்கள் ரிலீஸாகியுள்ளன. இந்த படங்களின் மூலம் 600 கோடி ரூபாய் வசூல் திரையரங்குகள் மூலமாக மட்டுமேக் கிடைத்துள்ளது. இதுவரை மலையாள சினிமாவில் எந்த நடிகரும் படைக்காத சாதனை இது.
எம்புரான் படம் நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றாலும் அதற்கிருந்த எதிர்பார்ப்பால் 280 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அதே போல துடரும் படமும் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் வெளியானது. முதல் நாள் முதல் காட்சிக்குப் பிறகு படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் மூலம் படம் பிக்கப் ஆனது. அதன் காரணமாகக் கேரளாவைத் தாண்டியும் தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இந்த படம் திரையரங்கு மூலமாக சுமார் 235 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸான ஹ்ருத்யபூர்வம் திரைப்படம் தற்போது 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் அவர் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் கொடுத்துள்ளார். மேலும் இந்த ஆண்டு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதும் அளிக்கப்பட்டுள்ளதால் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது.