ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இதன் மூலம் முதல் முறையாக இரு அணிகளும் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
இந்த தொடரில் இதுவரை தோல்வியே இல்லாமல் வெற்றி நடைபோட்டு வருகிறது இந்தியா. பாகிஸ்தான் அணியை முதல் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் எளிதாக வென்றது. ஆனால் பாகிஸ்தான் அணியோ கலவையான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.
1984 ஆம் ஆண்டு தொடங்கி கிட்டதட்ட 40 ஆண்டுகளாக நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி அதிகபட்சமாக 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பாகிஸ்தான் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இரு அணிகளும் மோதும் இறுதிப் போட்டி செப்டம்பர் 28 ஆம் தேதி நடக்கவுள்ளது.