தனுஷ் தனது நான்காவது படமாக (இயக்குனராக) இட்லி கடை படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  தனுஷுடன் பல முன்னணி நடிகர்கள் நடிக்க படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார். படம் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அப்போது பேசிய தனுஷ் “இட்லி கடை என்ற பெயருக்குப் பின்னால் காரணம் இருக்கிறது. அது ஒரு முக்கியமானக் கேரக்டர். சின்னவயதில் எங்கள் ஊரில் ஒரு இட்லி கடை இருக்கும். அதில் எப்படியாவது இட்லி சாப்பிடவேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால் அதற்குக் காசு இருக்காது.  அதனால் ஞாயிற்றுக் கிழமைகளில் குளத்தில் இறங்கி பூப்பறித்துக் கொடுத்து, அவர்கள் கொடுக்கும் இரண்டு ரூபாயில் நானும் என் அக்காக்கள் இருவரும் சாப்பிடுவோம். அந்த ருசி, பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் வராது” எனப் பேசினார்.
 
									
										
			        							
								
																	தனுஷின் இந்த குட்டிக்கதை இணையத்தில் ட்ரோல் ஆனது. சிம்பதிக்காக தனுஷ் இப்படி பேசுவதாக பலரும் விமர்சனங்களை வைத்தனர். இந்நிலையில் மதுரையில் நடந்த ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் “நான் பிறந்தது 1983 ஆம் ஆண்டு. எங்கள் அப்பா இயக்குனர் ஆனது 1991 ஆம் ஆண்டுதான். அதனால் அதுவரை எங்கள் வீட்டில் கஷ்டம்தான். அதுவும் எங்கள் வீட்டில் நான்கு பிள்ளைகள். அதனால் நாங்கள் வீட்டில் காசும் கேட்கமாட்டோம். கேட்டாலும் கிடைக்காது. அதனால்தான் நாங்கள் வேலை செய்து அதில் கிடைக்கும் காசு வைத்து இட்லி சாப்பிடுவோம்” எனக் கூறியுள்ளார்.