நமது உடல் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கு தேவையான ஆற்றலை தருவது இரத்தம்தான். இந்த இரத்தம் உடல் முழுவதும் சரியாக சென்றடையவில்லை என்றால் பல்வேறு உடல்நல குறைபாடுகள் ஏற்படும்.
ஒவ்வொரு மனிதருக்கும் எட்டு அடிப்படை இரத்த வகைகளில் ஒன்று இருக்கும். அவை A+, A-, B+, B-, AB+, AB-, O+, O- ஆகும். இந்த வகைப்பாடு, இரத்தத்தில் உள்ள Rh ஆன்டிஜென் (+) அல்லது Rh ஆன்டிஜென் இல்லாதது (-) ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
சரியான இரத்த வகையை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். காரணம், பொருந்தாத இரத்த வகையை ஒருவருக்கு செலுத்தினால், அது அவரது உடலில் கடுமையான நோய் எதிர்ப்பு எதிர்வினைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியும்.
இரத்த தானம் செய்ய அல்லது பெற உங்கள் இரத்த வகையைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இரத்த சோகை, ஹீமோபீலியா போன்ற நோய்களுக்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் விபத்துகளில் அதிக இரத்தம் இழந்தவர்களுக்கும் இரத்தம் தேவைப்படும்.
அவசர சிகிச்சை: அவசர மருத்துவச் சூழ்நிலைகளில் உங்கள் இரத்த வகை உடனடியாகக் கிடைப்பது சரியான சிகிச்சையை விரைந்து தொடங்க உதவும்.
பள்ளிகள், கல்லூரிகளில் சேர்க்கை பெறும்போதும், இருசக்கர வாகன உரிமம் எடுக்கும்போதும் இரத்த வகையை குறிப்பிடுவது கட்டாயமாகியுள்ளது.
மொத்தத்த்ல், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், அவசர காலங்களில் பிறருக்கு உதவவும் உங்கள் இரத்த வகையைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.