இந்திய விமான படையின் வரலாற்றில் 62 ஆண்டுகள் சேவை செய்த மிக்-21 ரக போர் விமானங்கள் இன்றுடன் ஓய்வு பெறுகின்றன.இன்று பிரியாவிடை நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மிக்-21 விமானங்கள் 1963-ஆம் ஆண்டு இந்திய விமான படையில் இணைக்கப்பட்டன. அன்று முதல் சுமார் 1,200 விமானங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டன. இவை கார்கில் போர் முதல் சமீபத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' வரை பல்வேறு முக்கியமான நடவடிக்கைகளில் பங்கு வகித்துள்ளன.
இன்று நண்பகல் 12.05 மணிக்கு, விமான படைத் தளபதி ஏ.பி. சிங் தலைமையிலான குழு, ஆறு மிக்-21 விமானங்களைச் சண்டிகர் வான் பரப்பில் கடைசியாக பறக்கவிட்டது. இந்த விமானங்கள் தரையிறங்கும் போது, அவற்றின் மீது தண்ணீர் பீய்ச்சி மரியாதை செலுத்தப்பட்டது. இது ஒரு வீரமிக்க விமானத்துக்குச் செய்யப்படும் பிரியாவிடை சடங்காகும்.
கடந்த சில காலமாக இந்த விமானங்கள் தொடர் விபத்துக்களில் சிக்கியதால், இந்த விமானங்களுக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.