வங்கதேசத்தில் நிகழ்ந்த மாணவர் போராட்டம் இந்தியாவுக்கு பிடிக்கவில்லை என வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவுடன் தற்போது எங்களுக்கு பிரச்சனைகள் இருப்பதாகவும், வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் பிரச்சனைகளை உருவாக்கிய ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பதாகவும், அது இரு நாடுகளுக்கும் இடையே பதட்டத்தை உருவாக்கி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகரின் இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா விரைவில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தில் மாணவர்கள் கடந்த ஆண்டு திடீரென நடத்திய போராட்டத்தால் அந்நாட்டின் அதிபராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.