அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தான் ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சந்திக்கவில்லை என்றும், அவ்வாறு சந்தித்ததாக வதந்திகள் பரப்பப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
"அரசியல் ரீதியாக நான் இதுவரை யாரையும் சந்திக்கவில்லை. குறிப்பாக, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட யாரையும் சந்திக்கவே இல்லை. எனக்கு எதிராக திட்டமிட்டு என்னை பற்றி வதந்தி பரப்புகின்றனர்" என்று அவர் ஆதங்கத்துடன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சமீபத்தில், செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்பட்டது. ஏற்கெனவே கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள செங்கோட்டையன், கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.