ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏற்கெனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், தற்போது பாகிஸ்தானும் தகுதி பெற்றுள்ளதால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோத உள்ளன. 41 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் இறுப் போட்டியில் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து எட்டு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. ஆனால், வங்கதேச அணி 136 என்ற எளிய இலக்கைக்கூட எட்ட முடியாமல் 124 ரன்கள் மட்டுமே எடுத்ததால், பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இறுதிப் போட்டி குறித்து ஆட்டநாயகன் விருது வென்ற ஷாஹீன் அப்ரிடி கூறியபோது, "நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று மூன்றே வார்த்தைகள் மட்டும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிய கோப்பையில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இறுதி போட்டியில் மோத உள்ளது, போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.