அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் தெரியவில்லை என்றும், "எங்களிடம் வந்தால் அவருக்கு அரசியல் சொல்லிக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் இருந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும், இப்போது உள்ள பிரச்சினையையும் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என்றும் அவர் கூறியது மேலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
"ஒரு கட்சியின் தலைவரை பிச்சைக்காரர், 'ஓட்டு போட்ட சட்டை போட்டவர்' என்று கூறுவது நியாயமா? அவருக்கு பேசத் தெரியவில்லை. இருப்பினும், அவரை நாங்கள் மன்னித்து விடுகிறோம்" என்று செல்வப்பெருந்தகை கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.