சமீபத்தில் கேரள இடதுசாரி அரசு ஐயப்ப சம்மேளனம் என்ற மாநாட்டை நடத்தியதை குறித்துக் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். பாரத மாதாவை விமர்சிப்பவர்கள் வெறுமனே "சபரிமலை பக்தர்கள் போல் நடிக்கிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.
கோழிக்கோட்டில்ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், "இந்த நபர்களுக்கு உண்மையில் மனதளவில் தூய்மையும், கொள்கைகளும், பக்தியும் இருந்தால், அவர்கள் வெளிப்படையாக அதை சொல்ல வேண்டும். அரசியல் வசதிக்காக மட்டுமே ஐயப்பனுக்கு விழா எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களின் பாதங்களை கழுவி மரியாதை செலுத்தும் சடங்கான 'குரு பூஜை'க்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, சில ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தன்னை அணுகியதாக ஆளுநர் அப்போது சுட்டிக்காட்டினார்.
தனது எண்ணங்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸால் ஈர்க்கப்பட்டவை என்றும் ஆளுநர் ஆர்லேகர் வெளிப்படையாக தெரிவித்தார். தேசத்தை கட்டமைப்பது மற்றும் சமூகத்தை ஒருங்கிணைப்பதில் ஆர்.எஸ்.எஸ். கவனம் செலுத்துவதை பற்றி அவர் பேசினார்.