Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்களும் அதன் பலன்களும்!

Advertiesment
புரட்டாசி

Mahendran

, வியாழன், 25 செப்டம்பர் 2025 (18:00 IST)
புரட்டாசி மாதம் வழிபாடுகளுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விரதங்கள் மற்றும் அவற்றின் பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
 
1. சித்தி விநாயக விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதம், காரிய தடைகளை நீக்கி வெற்றியை தரும். இந்த நாளில் விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்து, மோதகம், சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டால், வறுமை நீங்கி, தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். 
 
2. தூர்வாஷ்டமி விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில், வடக்கு நோக்கிப் படர்ந்துள்ள அருகம்புல்லால் சிவன் மற்றும் விநாயகரை வழிபடுவது இந்த விரதத்தின் முக்கிய வழிபாடாகும். இந்த விரதம் குடும்பத்தில் செழிப்பை உண்டாக்கும்.
 
3. ஞான கவுரி வழிபாடு
புரட்டாசி மாத வளர்பிறை தசமி திதியில் ஞான கவுரி தேவியை வழிபடுவது சிறப்பானது. திருமணத் தடை உள்ள கன்னியர்கள் இவரை வழிபட்டால் மனதிற்கினிய கணவன் கிடைப்பார். .
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண தேவை உண்டாகலாம்! - இன்றைய ராசி பலன்கள் (25.09.2025)!