பூம்புகார் அருகே கடலுக்கு அடியில் கட்டிடங்கள் இருந்ததாகவும், அங்கு ஒரு வணிக நகரமே இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்டைய தமிழர் நாகரீகம் குறித்து சீர்காழி அருகே பூம்புகாரியில் ஆழ்கடல் பகுதியில் கடந்த ஆறு நாட்களாக ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், இன்று ஏழாவது நாளாகவும் ஆய்வு நடைபெற்றது.
அப்போது கடற்கரையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் 20 மீட்டர் ஆழம் வரை சென்று ஆய்வுப்பணிகள் நடந்த போது அங்கு கட்டிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அது ஒரு வணிக நகரம் போல் தெரிவதாகவும், அந்த கட்டிடங்கள் கடலுக்குள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியக் கடல்சார் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை இணைந்து இந்த கண்டுபிடிப்பை கண்டறிந்துள்ள நிலையில், இது குறித்து மேலும் பல ஆய்வுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.