Publish Date: Fri, 27 Feb 2026 (21:22 IST)
Updated Date: Fri, 27 Feb 2026 (21:25 IST)
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மீது அவரின் மனைவி பரபரப்பு புகார்களை கூறி அதிர வைத்திருக்கிறார். விஜயிடம் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருக்கும் சங்கீதா விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறி அதிர்வலைகளை உண்டு பண்ணியிருக்கிறார்.
நான் பலமுறை சொல்லியும் விஜய் நடிகையுடனான உறவை துண்டிக்கவில்லை.. இன்னமும் அந்த நடிகையுடன் அவருக்கு தொடர்புண்டு. வீட்டிலேயே நடிகையுடன் குடும்பம் நடத்தினார்.. என்னை கொடுமைப்படுத்தினார்.. சைக்கோ போல நடந்துகொண்டார்.. பொருளாதார ரீதியாக என்னை முடக்கப் பார்த்தார்.. சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்றெல்லாம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார் சங்கீதா..
இந்நிலையில், விவாகரத்து மனுவில் நான்கு முக்கிய கோரிக்கைகளை வைத்திருக்கிறார் சங்கீதா..
25.8.1999ம் வருடம் நடந்த எங்கள் திருமணத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்..
வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை நீலாங்கரையில் உள்ள எனது புகுந்த வீட்டில் வசிக்க உரிமை அளிக்க வேண்டும்..
விஜயின் வருமானம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றிற்கு ஏற்றது போல் நிரந்தர ஜீவனாம்சத்தை எனக்கு வழங்கி உத்தரவு வழங்க உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்குக்கான செலவுகளையும் விஜயே ஏற்க உத்தரவிட வேண்டும்..
ஆகிய டிமாண்ட்களை சங்கீதா வைத்திருக்கிறார்.