Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஓவர்!.. செல்வபெருந்தகை கொடுத்த அப்டேட்!...

Advertiesment
selva perunthagai
காங்கிரசை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாகவே திமுகவுடன் கூட்டணி அமைத்துதான் தமிழகத்தில் அனைத்து தேர்தல்களையும் சந்தித்து வருகிறது.. ஆனால் திடீரென ஆட்சி மற்றும் அதிகாரத்தில் எங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியதால் திமுகவுக்கு அது சிக்கலை ஏற்படுத்தியது..

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா அல்லது காங்கிரஸ் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் செல்லுமா என்கிற விவாதம் எழுந்தது.. ஏனெனில் காங்கிரசை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை தவெகவும் செய்து வந்தது..

ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பது மட்டுமில்லாமல் இரண்டு ராஜ்யசபா சீட் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் பல தொகுதிகள், சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகள் என பல டிமான்ட்களையும் காங்கிரஸ் வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இன்று காலை செல்வபெருந்தை, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட சிலர் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் சென்று டி.ஆர் பாலு குழுவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்..

அதன்பின் செய்தியாளரிடம் பேசிய செல்வப்பெருந்தகை ‘திமுகவுக்கும் எங்களுக்கும் சுமூகமான கூட்டணி இருக்கிறது.. இது இயற்கையான கூட்டணி. எங்களுக்கு இடையில் எந்த பிரச்சனையும் இல்லை.. பேச்சுவார்த்தை நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது எங்கள் தரப்பு கோரிக்கையை வைத்திருக்கிறோம்.. திமுக அதுபற்றி ஆலோசிப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.. ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.. வேறு எந்த கட்சியுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தவில்லை’ என கூறினார். அவரின் கருத்தை கிரிஷ் சோடங்கரும் உறுதி செய்திருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சங்கீதா மீது சேறை பூசும் ரசிக குஞ்சிகள்!.. ரொம்ப ஓவரா போறீங்கடா!....