Publish Date: Sat, 28 Feb 2026 (11:08 IST)
Updated Date: Sat, 28 Feb 2026 (11:12 IST)
நடிகர் விஜயின் மனைவி சங்கீதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமா பிரபலங்களிடம் விவாகரத்து என்பது சகஜமான ஒன்றுதான் என்றாலும் விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு இருக்கிறது என சங்கீதா சொல்லியிருக்கும் காரணம்தான் இப்போது பேச பொருளாக மாறியிருக்கிறது.
கடந்த 5 வருடங்களுக்கு மேல் தனது கணவர் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார். இதுபற்றி பலமுறை பேசியும் விஜய் கேட்கவில்லை.. அதோடு சைக்கோ போல நடந்து கொண்டார்.. தன்னை வீட்டில் வைத்து கொடுமைப்படுத்தினார்.. பொருளாதார ரீதியாக முடக்க பார்த்தார் என அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசியிருக்கிறார் சங்கீதா..
சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முதலில் விஜயை திரிஷாவை விட்டு வெளியே வர சொல்லுங்க என்று பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.. இதன் காரணமாக அவர் வருத்தமும் தெரிவித்தார்.. ஆனால் தற்போது விஜயின் மனைவி சங்கீதாவே இப்படி ஒரு புகாரை கூறியிருக்கிறார்..
இந்நிலையில், சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் இதைத்தானே நயினார் நாகேந்திரன் சொன்னாரு.. அவர் போட்டு அடிச்சி மன்னிப்பு கேட்க வச்சிங்க என்று வடிவேல் மீம்ஸ் போட்டு கலாய்த்திருக்கிறார்.