சினிமா தொழிலாளர்களுக்கு நிவாரணம் – கமல், தனுஷ் உதவி !

வியாழன், 26 மார்ச் 2020 (08:16 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு கமல் 10 லட்ச ரூபாயும் தனுஷ் 15 லட்ச ரூபாயும் நிதியுதவி அளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 19 ஆம் தேதியில் இருந்தே சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. மேலும் இப்போது மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்துள்ளதை அடுத்து சினிமாவில் தினப்படி சம்பளத்துக்கு வேலை செய்யும் 25,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி முன்னணி நடிகர்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் (10 லட்சம்), சிவகார்த்திகேயன் (10 லட்சம்), ரஜினி (50 லட்சம்), விஜய்சேதுபதி (10 லட்சம்), தயாரிப்பாளர் தாணு (250 மூட்டை அரிசி)  மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் (150 அரிசி மூட்டை), நடிகர் கமல்ஹாசன்(10 லட்சம்), நடிகர் தனுஷ் (15 லட்சம்), இயக்குனர் ஷங்கர் (10 லட்சம்), பி வாசு (1 லட்சம்), இயக்குநர் ஹரி 100 அரிசி மூட்டைகள், நடிகர் சூரி (8 அரிசி மூட்டைகள்), மனோபாலா (10 அரிசி மூட்டைகள்) என தங்களால் இயன்ற உதவிகளை அளித்து வருகின்றனர்.

ஆனால் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள விஜய் மற்றும் அஜித் ஆகியோர் இன்னும் நிதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அவர் தான் என்னுடைய "crush"... சீக்ரெட் விஷயத்தை சொன்ன பிரியா பவானி ஷங்கர்!