அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்டு வோல்ஃப், அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீத வரியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது "யானையை எலி தாக்குவது போலத்தான், அது அச்சுறுத்துவதாக இருக்காது, மாறாக நகைச்சுவையாக இருக்கும்" என்று அவர் பகிரங்கமாக கூறியுள்ளார்.
வோல்ஃப் தனது கருத்தில், உலக அதிகார மையம் மாறி கொண்டிருப்பதை நேரடியாக காண முடிவதாகக் குறிப்பிட்டார். அமெரிக்கா தலைமையிலான ஜி7 நாடுகள் தற்போது பொருளாதார வலிமையைக் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
அதற்கு மாறாக, இந்தியா தலைமை தாங்கும் பிரிக்ஸ் நாடுகள் பொருளாதாரத்தில் முன்னிலை வகிப்பதாகவும், பிரிக்ஸ் அமைப்பு ஜி7 அமைப்பை பின்னுக்கு தள்ளியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
டிரம்ப்பின் இந்த வரி விதிப்பு, இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார வலிமையை குறைக்கும் என்று அமெரிக்கா நம்பினாலும், அது இந்தியாவை பெரிய அளவில் பாதிக்காது என்றும், மாறாக, அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வோல்ஃப் தெரிவித்துள்ளார்.