இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார். அவர் சீனாவின் தியான்ஜின் நகரை வந்தடைந்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சீனாவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதாகும். இந்த மாநாட்டில், உலக மற்றும் பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்து விவாதிக்கப்படும்.
நாளை, பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார். இந்த பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது, எல்லை பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு வர்த்தகம் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தலைவர்களின் சந்திப்பு, பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.