12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி, இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில், இந்தியா, சீனா அணியுடன் மோதுகிறது.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், செப்டம்பர் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்த தொடரின் மூலம் தகுதிபெற முடியும் என்பதால், போட்டிக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
உலகக் கோப்பைக்கு தரவரிசை மூலம் தகுதிபெறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்த இந்தியாவுக்கு, இந்த ஆசிய கோப்பை தான் இறுதி வாய்ப்பு. இதனால், இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்வது இந்தியாவுக்கு கட்டாயமாகும்.
அதேபோல் இன்று முதல் புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது சீசன் தொடங்குகிறது. இன்றைய முதல் நாளில் தமிழ் தலைவாஸ் அணி, தெலுகு டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. மற்றொரு முக்கியமான போட்டியில், பெங்களூரு புல்ஸ் மற்றும் புனேரி பல்டன் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
இன்று ஒரே நாளில் ஆசிய கோப்பை ஹாக்கி மற்றும் புரோ கபடி தொடங்குவதால் விளையாட்டு ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.