பிரபல ஏஐ நிறுவனமான OpenAI தனது அலுவலகத்தை இந்தியாவில் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மக்கள் பலரும் சாட்ஜிபிடி, ஜெமினி, பெர்ப்ளெக்ஸிட்டி என பல ஏஐ செயலிகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிலையில் உள்ள ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவிற்கு அடுத்தது அதிகமாக சாட் ஜிபிடியை பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. ஆனால் அதன் அதிகமான ப்ரீமியம் காரணமாக பலரும் இலவச வெர்சனையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் சாட்ஜிபிடி பயன்பாட்டை பரவலாக்குவது மற்றும் குறைந்த விலையிலான ப்ரீமியம் உள்ளிட்டவற்றிற்கு திட்டமிட்டுள்ள ஓபன் ஏஐ நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தை டெல்லியில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏஐக்கு முன்னதாக Search Engine கள் கோலோச்சியபோது கூகிள் இந்திய பயனாளர்களை டார்கெட் செய்து சேவைகளை அளித்தது. தற்போது ஓபன் ஏஐயும் இந்த யுக்தியை கையாள்வது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K