Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷால் - தன்ஷிகா நிச்சயதார்த்தம்.. இனி முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன்..!

Advertiesment
Vishal

Siva

, ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2025 (10:02 IST)
நடிகர் விஷால், சாய் தன்ஷிகாவுடன் தனது திருமண நிச்சயதார்த்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.  உலகெங்கிலும் இருந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
 
அனைவரின் ஆசிர்வாதத்துடன், சாய் தன்ஷிகாவை நிச்சயம் செய்துள்ளேன்" என்று மகிழ்ச்சியுடன் அறிவித்த விஷால், தனது விரலில் சாய் தன்ஷிகாவின் பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தைக் காண்பித்தார்.
 
மேலும், ஒன்பது வருடங்களாகத் தான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நடிகர் சங்கக் கட்டிடத்தின் திறப்பு விழா, இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறும் என தெரிவித்தார். அந்த கட்டிடத்தின் திறப்பு விழா முடிந்த அடுத்த நல்ல முகூர்த்தத்திலேயே தனது திருமணம் நடைபெறும் என்றும், அது நடிகர் சங்க வளாகத்தில் தான் நடக்கும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.
 
கடவுளால் எனக்காக அனுப்பப்பட்ட தேவதை சாய் தன்ஷிகா," என்று கூறிய விஷால், "எங்கள் இருவரையும் வாழ்த்தி ஆசிர்வதிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். மேலும், தனது வாழ்க்கையில் துணைவியாரின் பேச்சிற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார் என்றும், காதல் திருமணத்தில் புரிதல் முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
 
"தாம்பத்திய வாழ்க்கையில் மட்டுமல்ல, எந்தவொரு விஷயத்திலும் ஈகோ இல்லாமல் மனநிலையிருந்தால், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்" என்றார். சாய் தன்ஷிகா தனக்கு 16 வருடங்களாக நண்பராக இருந்து வருவதாகவும், தான் எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் முதலில் வருபவர் அவர்தான் என்றும் கூறினார்.
 
திருமணத்திற்கு பிறகு காதல் படத்தில் நடிப்பேன் என்றும், ஆனால் இனி தனது படங்களில் முத்த காட்சிகள் இருக்காது என்றும் உறுதியளித்தார். 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாய் பிரியர்கள் அதிருப்தி! இன்னைக்கு நீயா நானா எபிசோட் அவ்ளோதானா?