அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நடிகர் விஜய்யின் தலைமையில் ஒரு தனி அணி அமையும் என்றும் கணித்துள்ளார்.
தற்போது தமிழக அரசியல் களத்தில், திமுக தலைமையில் ஒரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் மற்றொரு அணியும் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்து போட்டியிடுவார் என்றும், நான்காவதாக விஜய் தலைமையில் ஒரு புதிய அணி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது டிடிவி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக கூறப்பட்டாலும், அவர் விஜய்யின் தலைமையிலான அணிக்குச் செல்வாரா என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினகரனின் இந்தக் கருத்து, தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணி சாத்தியங்கள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்தல் நெருங்கும்போது, விஜய்யின் அரசியல் நிலைப்பாடு மற்றும் அவரது கூட்டணி குறித்த முடிவுகள் தெளிவாக தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.