ராஜஸ்தானில் காதலியுடன் வாழ்வதற்கு தடையாக இருந்த மனைவியை கொன்றுவிட்டு பாஜக உள்ளூர் தலைவர் நாடகம் போட்டது அம்பலமாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியை சேர்ந்தவர் ரோஹித் சைனி. இவருக்கு சஞ்சு என்ற பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. ரோஹித் அப்பகுதியில் உள்ளூர் பாஜக தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ரோஹித்துக்கும் அதே பகுதியை சேர்ந்த ரிது சைனி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவர்கள் ஒன்று சேர சஞ்சு தடையாக இருந்துள்ளார். இதனால் ரோஹித் தனது மனைவியை கொல்ல திட்டமிட்டுள்ளார்.
தனது மனைவியை கொன்று விட்டு தனது வீட்டில் திருடர்கள் நுழைந்து தனது மனைவியை கொன்றுவிட்டு நகை, பணத்தை திருடிச் சென்றதாக நாடகம் போட்டுள்ளார் ரோஹித். ஆனால் திருட்டு நடந்ததற்கான எந்த தடயமும் தெரியாததால் போலீஸார் ரோஹித் மீது சந்தேகம் அடைந்தனர். பின்னர் போலீஸ் தங்கள் பாணியில் விசாரித்ததில் ரோஹித்தும் அவரது காதலி ரிதுவும் சேர்ந்து சஞ்சுவை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Edit by Prasanth.K