இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இந்த அறிவிப்பு, அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் டிராவிட்டை அணியின் நிர்வாகத்தில் உயரிய பொறுப்பில் அமர்த்த, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் முன்வந்ததாகவும், ஆனால் அதனை ஏற்க டிராவிட் மறுத்துவிட்டதாகவும் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிராவிட் தனது பதவியில் இருந்து விலகியதற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. அவரது விலகல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.