Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லா போன்லயும் நான்தான் இருக்கணும்! கூகிள் செய்த வேலை! - அபராதம் விதித்த ஆஸ்திரேலியா!

Advertiesment
Google search engine

Prasanth K

, புதன், 20 ஆகஸ்ட் 2025 (10:19 IST)

உலக பிரபலமான கூகிள் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் செய்த ஒரு வேலை காரணமாக அந்நிறுவனத்திற்கு ரூ.313 கோடி அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது.

 

உலகம் முழுவதும் மக்கள் பலரால் பல்வேறு தகவல்களுக்கும் நாடப்படும் முதல் தேடுபொறியாக Google Search Engine இருந்து வந்தது. கடந்த சில தசாப்தங்களில் யாஹூ உள்ளிட்ட பல தேடுபொறிகளாலும் வீழ்த்த முடியாத கூகிள், தற்போது ஏஐ வரவால் பின்னடைவை சந்திக்கத் தொடங்கியுள்ளது.

 

இந்நிலையில் பயனாளர்களை தக்க வைக்க ஆஸ்திரேலியாவில் கூகிள் செய்த வேலையால் தற்போது அந்நிறுவனம் சிக்கலில் மாட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்த கூகிள், அந்நிறுவனங்கள் விற்பனை செய்யும் ஸ்மார்ட்போன்களில் கூகிள் தேடுபொறி மட்டுமே இருக்குமாறு செய்துள்ளது. இதுகுறித்து வழக்குத் தொடரப்பட்ட நிலையில், கூகிள் நிறுவனத்திற்கு ரூ.313 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது ஆஸ்திரேலிய நீதிமன்றம், 

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்கள் குறையை கேட்டு கொண்டிருந்த டெல்லி முதல்வர் மீது தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி..!