இரவு உணவை முடித்த பிறகு ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அத்தகைய சில முக்கிய நன்மைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
ஏலக்காய் செரிமான நொதிகளை தூண்டி, வயிறு வீக்கம், அமிலத்தன்மை மற்றும் வாயுத் தொல்லை போன்ற செரிமான பிரச்சினைகளை குறைக்கும். இது செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, வயிற்று பிரச்சினைகளுக்கு இயற்கை மருந்தாக செயல்படும்.
ஏலக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிக்கும். இதன் மூலம் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியமும் மேம்படும். மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் ஏலக்காய் உதவுகிறது.
ஏலக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் வாய் துர்நாற்றத்தை போக்கி, சுவாசத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.