Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோஹித்தின் காயம் குறித்து வெளிப்படைத் தன்மை வேண்டும் ! சுனில் கவாஸ்கர் கேள்வி!

webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:15 IST)
இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் எடுக்கப்படவில்லை.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியினரோ ரோஹித் ஷர்மா வலைப்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதனால் அவருக்கு என்ன காயம் என்பது குறித்து தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. இதைக் குறிப்பிட்டு பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸகர் ‘ரோஹித்தின் காயம் குறித்த வெளிப்படையான தகவல் அளிக்கப்பட வேண்டும். காயம் தீவிரமாக இருந்திருந்தால் அவர் பயிற்சி மேற்கொள்வதில் திணறியிருப்பார்.        ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. பின்னர் ஏன் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை?’ எனக் கேள்வி எழும்பியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

தோனி இல்லாம சிஎஸ்கேவா? அடுத்த ஆண்டு கேப்டன் யார்? – காசி விஸ்வநாதன் விளக்கம்