Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அசாமில் ஆட்சியை பிடிக்கும் பாஜக!.. கருத்துக்கணிப்பில் தகவல்!...

Advertiesment
assam
தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்தது. கடந்த 9ம் தேதி புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் கடந்த 23ம் தேதி முதல் கட்டமாக 152 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக இன்று 142 தொகுதிகளிலும் நடைபெற்றது.

இந்நிலையில்தான், ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தற்போது பல ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது. 122 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அசாமில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பின்படி அசாமில் பாஜகவே ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia


ஆக்சிஸ் மை இந்தியா என்கிற நிறுவனம் எடுத்துள்ள கருத்துக்கணிப்பின்படி அசாமில் பாஜக 88 - 100 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் 24 முதல் 36 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் மற்ற கட்சிகள் 3 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல் Matrize என்கிற நிறுவனம் எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் அசாமில் பாஜக 85 முதல் 95 இடங்களிலும், காங்கிரஸ் 25 முதல் 32 இடங்களிலும்,  மற்ற கட்சிகள் 6 முதல் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற எனவும் கூறப்பட்டிருக்கிறது. எனவே தொடர்ந்து வெளியாகும் கருத்துக்கணிப்புகளை பார்க்கும்போது அசாமில் பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லா கருத்துக்கணிப்பிலும் முதலிடம்!.. மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுக?...