Publish Date: Wed, 29 Apr 2026 (18:59 IST)
Updated Date: Wed, 29 Apr 2026 (19:01 IST)
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், எக்ஸிட் போல் முடிவுகளை இன்று வெளியானது . இந்த முடிவுகளின்படி, தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதே நேரத்தில் முதல் தேர்தலைச் சந்திக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான இடங்களைக் கைப்பற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்களைக் கைப்பற்றும் என்றும், அதிமுக கூட்டணி 60-80 இடங்களை கைப்பற்றும் என்றும் விஜயின் தவெக 18 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது. இதன்மூலம் திமுக ஆட்சி அமைக்கபோவது உறுதியாகியுள்ளதாக கருத்துகணிப்புகள் கூறுகின்றன.