Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடிமைப்பணி தேர்வு: தேர்வர்களுக்கு 5 ஆயிரம் உதவித்தொகை!.. விண்ணப்பிப்பது எப்படி?...

Advertiesment
குடிமைப்பணி தேர்வு

Bala

, புதன், 17 டிசம்பர் 2025 (14:47 IST)
குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தில் கலந்து கொள்ளும் தேர்வுகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு என தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அகில இந்திய குடிமை தேர்வு பயிற்சி மையம் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இலவச பயிற்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை இப்போது வெளியிட்டிருக்கிறது.
 
குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமை பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் பலருக்கும், முதல் நிலை தேர்வு முதன்மை தேர்வு மற்றும் ஆளுமை தேர்வு போன்ற தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
 
அதன் தொடர்ச்சியாக பயிற்சி மையத்தில் 2025 ஆம் ஆண்டில் முதன்மை தேர்வுக்கு 376 ஆர்வலர்களில் 34 பெண்கள் மற்றும் 6சமூக மாற்றுத்திறனாளிகள் உட்பட 87 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அந்த மையத்தின் சார்பாக தகுதி பெற்றவர்களுக்கு வருகிற 19 .21.2025 மற்றும் 20.12.2025 ஆகிய இரண்டு நாட்களிலும் மாதிரி ஆளுமை தேர்வு நடத்தப்படவுள்ளது.  இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் டிசம்பர் 17 மாலை 5 மணிக்குள் civilservicecoaching.com  என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், DAF-I, DAF-II விபரங்களை பதிவு செய்து [email protected] என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  
 
இந்த பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் மட்டுமல்லாமல் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற தேர்வர்களும்  ந்த ஆளுமை தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவார்கள். அப்படி ஆளுமைத் தேர்வில் பங்கேற்கும் ஆர்வலர்களுக்கு டெல்லி சென்று ஆளுமை தேர்வை எழுதி வர செலவுக்காக 5 ஆயிரம் ரூபாயை உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாருடன் கூட்டணி?.. அதிமுகவா? காங்கிரஸா?.. விஜய் போடும் அரசியல் கணக்கு!..