Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டு மாதங்களாக பாலைவனத்தில் சிக்கிய படக்குழு – குடும்பத்தினர் மகிழ்ச்சி!

webdunia
வெள்ளி, 22 மே 2020 (08:13 IST)
நடிகர் பிருத்விராஜ் மற்றும் ஆடுஜீவிதம் படக்குழுவினர் விரைவில் தாயகம் திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் ஆடுஜீவிதம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வெளிநாடுகளுக்கு சென்று மாட்டிக்கொள்ளும் இந்தியர்களின் வாழ்வைப் பற்றியது. இந்த படத்துக்காக 58 பேர் கொண்ட குழுவினரோடு ஜோர்டான் நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தில் முகாமிட்டு இருந்தனர் படக்குழுழ்வினர். அப்போது கொரோனா பரவல் உச்சத்தை தொட்டதால் விமானங்கள் முடக்கப்பட்டதால் படக்குழுவினர் அனைவரும் அந்த நாட்டில் இருந்து இந்தியா திரும்ப முடியாத சூழலுக்கு ஆளானார்கள். அவர்களை இப்போது அங்கிருந்து மீட்டு வர முடியாது என மத்திய மற்றும் மாநில அரசுகள் கைவிரித்துவிட்டன.

அதையடுத்து அந்நாட்டு அரசிடம் அனுமதி வாங்கிய படக்குழு படப்பிடிப்பை நடத்தியது. இந்நிலையில் இப்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளதாக பிருத்விராஜ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த குழுவினருடனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் நிலையில் ஜோர்டானில் சிக்கியுள்ள படக்குழுவையும் மீட்க தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 58 பேரும் தனி விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து கொச்சிக்கு மேலும் ஒரு விமானத்தில் வர இருக்கின்றனர். 60 நாட்களுக்கு மேல் பாலைவனத்தில் கஷ்டப்பட்ட படக்குழுவினரின் வருகை அவர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

ராணா நிச்சயதார்த்தம் விழாவில் கணவருடன் சமந்தா - ஜோரான புகைப்படங்கள்!