Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீர் பட்டால் அரிக்கும் விசித்திர நோய்: அக்வாஜெனிக் ப்ரூரிட்டஸ்

Advertiesment
அக்வாஜெனிக் ப்ரூரிட்டஸ்

Mahendran

, வியாழன், 4 செப்டம்பர் 2025 (18:47 IST)
குளியல் என்பது உடலை சுத்தமாக வைத்திருக்க மிகவும் அவசியமானது. ஆனால், சிலருக்கு தண்ணீர் பட்டாலே தாங்க முடியாத அரிப்பு ஏற்படும். இந்த விசித்திரமான நிலைக்கு அக்வாஜெனிக் ப்ரூரிட்டஸ் அல்லது நீர் தினவு என்று பெயர். இது மிகவும் அரிதான ஒரு தோல் பிரச்சனை.
 
இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு அரிப்பு ஏற்படுமே தவிர, தோலில் எந்தவித தடிப்போ, நிற மாற்றமோ ஏற்படாது. குளித்து முடித்ததும், அரிப்பை தாங்க முடியாமல் சிலர் நீண்ட நேரம் உடலை துணியால் தேய்த்து கொண்டே இருப்பார்கள்.
 
 தண்ணீர் தோலின் மீது படும்போது, நரம்புகள் ஏதேனும் ஒவ்வாமை அறிகுறிகளை ஏன் உருவாக்குகின்றன என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
 
சில சமயங்களில், தண்ணீர் தோலின் மேல்புறத்தை தொட்டவுடன், 'மாஸ்ட் செல்கள்' எனப்படும் நோய் எதிர்ப்பு செல்களிலிருந்து ஹிஸ்டமின் போன்ற ரசாயனங்கள் வெளியாகி, அரிப்பைத் தூண்டலாம்.
 
மருத்துவ உலகத்தின் பல சிக்கலான கேள்விகளுக்கு விடை தெரியாதது போலவே, இதுவும் ஒரு விசித்திரமான நோய் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரம்புட்டான் பழம்: சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த பழம்