மாதுளம் பழம் மட்டுமல்ல, அதன் பூவும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் மாதுளம் பூவின் பயன்பாடுகள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன.
மாதுளம் பூ, ரத்த வாந்தி, ரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, மற்றும் உடல் சூடு போன்ற பல உடல்நலக் கோளாறுகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. இது ரத்த விருத்திக்கும் உதவுகிறது.
இருமல் இருந்தால், மாதுளை மொக்கை வெயிலில் காயவைத்து தூளாக்கி மூன்று வேளை சாப்பிடலாம்.
மாதுளம் பூ, அதன் காய், மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைச் சம அளவில் கலந்து சாறெடுத்து, தாய்ப்பாலில் கலந்து கண்களில் விடுவது கண் தொடர்பான நோய்களுக்கு நல்லது.
மாதுளம் பூவை பசு நெய்யுடன் சேர்த்து அடுப்பில் காய்ச்சி, ஆறவைத்து பாட்டிலில் சேமித்து, காலையும் மாலையும் அருந்தினால் உடலில் பல நோய்கள் குணமாகும்.
இந்தச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு முன், தகுந்த மருத்துவரை கலந்தாலோசித்து செயல்படுவது நல்லது.