பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தின் பஜௌர் மாவட்டத்தில் உள்ள கவ்சர் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தபோது, சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்புக்கான காரணம் மற்றும் தாக்குதலுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல், பொது இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.