ஒன்றிய அரசு சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட மசோதா, பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ஒரு பெரும் அடியாக விழுந்துள்ளது. இந்த மசோதாவின் மூலம், பணம் கட்டி விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் சூதாட்டமாகவே கருதப்பட்டு, முற்றிலுமாகத் தடை செய்யப்படுகின்றன.
இது சம்மந்தமாக பிசிசிஐ தரப்பில் இருந்து செயலாளர் தேவஜித் சைக்கியா பேசும்போது “மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை அடுத்து ட்ரீம் 11 உடனான உறவை முடித்துக் கொள்கிறோம். வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களோடு பிசிசிஐ தொடர்பு வைத்துக் கொள்ளாது” எனக் கூறியிருந்தார். அதையடுத்து புதிய ஸ்பான்சருக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை துபாயில் ஆசியக் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி ஸ்பான்சர் இல்லாத ஜெர்ஸி அணிந்து விளையாடவுள்ளது. சமீபத்தில் இந்திய அணி வீரர்கள் ஆசியக் கோப்பைக்கான போட்டோஷூட் நடத்திய போது அந்த ஜெர்ஸிக்களில் ஸ்பான்சர் பெயர் இடம்பெறவில்லை.