Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த ‘குட் பேட் அக்லி’ படக்குழுவுக்கு தற்காலிகத் தடை.. நீதிமன்றம் உத்தரவு!

Advertiesment
அஜித்

vinoth

, திங்கள், 8 செப்டம்பர் 2025 (13:38 IST)
சமீபகாலமாக பழைய பாடல்களை படங்களில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அப்படிப் பயன்படுத்தப்படுபவை பெரும்பாலானவை இளையராஜா பாடல்கள்தான். ஆனால் அந்த பாடல்களின் உரிமை இளையராஜாவிடம் உள்ளதா அல்லது இசை நிறுவனங்களிடம் உள்ளதா என்பது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பல குளறுபடிகள் உருவாகின்றன.

சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் சகலகலா வல்லவன் படத்தில் வரும் ‘இளமை இதோ இதோ’ என்ற பாடலை அஜித்தின் சண்டை காட்சி ஒன்றில் பயன்படுத்தி இருந்தனர். அதுபோல அர்ஜூன் தாஸ் எண்ட்ரிக்கு ‘ஒத்த ரூபா தாரேன்’ என்ற பழைய பாடலை பயன்படுத்தி இருந்தனர். இந்த பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. ஆனால் தன்னிடம் அதற்கான அனுமதி வாங்கவில்லை என அவர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் மேல் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தில் இருக்கும் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன தனுஷ்… இயக்குனர் & தயாரிப்பாளர் lock!