Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள் தெரியுமா...?

webdunia
ஒருவருக்கு திடீர் பதவியோ, பணமோ கிடைத்தால் நாம் அனைவரும் இவர்களுக்கு எங்கோ மச்சம் இருக்கு என்று கூறுவதுண்டு. அதை பற்றி தெரிந்து  கொள்ளலாம். 

நடு நெற்றியில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு புகழ், பதவி அந்தஸ்து தேடிவருமாம். வலது நெற்றியில் இருந்தால், தைரியமாகவும், கர்வமாகவும் இருப்பார்களாம்.  அதுவே, இடது புறத்தில் இருந்தால் கோவக்கரராக இருப்பார்களாம். 
 
கழுத்தில் மச்சம் உள்ள பெண்கள், திடகாத்திரமும் நல்ல ஆரோக்கியமும் பெற்றுத் திகழ்வார்கள். இவர்கள், எவருக்கும் அஞ்சாதவர். எப்போதும் மகிழ்ச்சியாகவே  இருப்பார்கள். பொறாமைக் குணம் இவர்களுக்கு கிடையாது. பெண்களுக்கு வலது கழுத்துப் பகுதியில் மச்சம் இருந்தால் பிள்ளைகளால் யோகமான வாழ்க்கை  ஏற்படும்
 
மூக்கில் மச்சம் இருந்தால் பொறுமையானவர்களாக இருப்பார்களாம். அதுவே, நுனி மூக்கில் இருந்தால் திடீர் என்று அதிர்ஷ்டம் தேடி வருமாம். 
 
கன்னத்தில் இடது பக்கம் இருந்தால் மற்றவர்களை எளிதில் வசீகர படுத்துபவர்கலாம். அதுவே, வலது பக்கத்தில் இருந்தால் சுறுசுறுப்பாக இருப்பார்களாம். 
 
நாக்கில் மச்சம் இருந்தால் அவர் சொல்வது அப்படியே பலிக்குமாம். வயிற்றில் மச்சம் இருந்தால் நல்ல குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்களாம். 
 
முதுகின் வலப்புறம் மச்சம் இருந்தால், பெரிய லட்சியவாதியாக இருப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்குவர். வலப்புற முதுகில் மச்சம் உடைய பெண்கள்,  வேலை செய்து சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள். முதுகின் இடதுபுறம் மச்சம் இருந்தால் இளமை பருவத்தில் மந்தநிலை ஏற்படும். கல்வி கற்பதில் இடையூறும்  முயற்சிகளில் தோல்வியும் ஏற்படும்.
 
வயிற்றில் தொப்புளுக்கு கீழ் இருந்தால் பொருள் நஷ்டம் ஏற்படும். அதுவே, தொப்புளின் பக்கத்தில் இருந்தால் அவர் ஆடம்பரமாக வாழ்வராம். அடிவயிற்றில் மச்சம் இருந்தால் ராஜயோக அம்சம் கொண்டவர் என்று கூறுகின்றனர். தானாக உயர் பதவிகள் தேடிவருமாம்.

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (31-08-2020)!