மாமன்னன் படத்த்தின் வெற்றிக் கூட்டணியான பகத் பாஸில் மற்றும் வடிவேலு மீண்டும் இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்துள்ளனர். படத்தில் விவேக் ஹர்ஷன் மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சுதேஷ் சங்கர் என்பவர் இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படம் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ரிலீஸாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஒரு பெட்டி திருடனும் மறதி நோய் உள்ள நோயாளியும் மேற்கொள்ளும் பயணத்தில் எதிர்கொள்ளும் சம்பவங்களே மாரீசன் படத்தின் கதை. இதை நகைச்சுவையாகவும் உணர்வுபூர்வமாகவும் சொன்ன விதத்தில் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 2.2 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.