இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ஆண்டர்சன் –டெண்டுல்கர் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளையும் இந்தியா ஒரு போட்டியையும் வென்றுள்ளது. அடுத்த போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ரஃபோட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 188 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் சதமடித்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் மொத்தமாக 13,379 ரன்கள் சேர்த்துள்ளார்.
இந்த போட்டியில் 150 ரன்கள் சேர்த்ததின் மூலம் ரூட், பாண்டிங், காலிஸ், ராகுல் டிராவிட் ஆகியோரை முந்தி சச்சினுக்கு அடுத்து இரண்டாம் இடத்தைப் பிடிப்பார். முதலிடத்தில் சச்சின் 15,921 ரன்களோடு உள்ளார்.