தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கடலை மிட்டாய் உடலுக்கு தேவையான பலவகையான ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடியது. துரித உணவுகளை போல அல்லாமல் முழுவதும் ஆரோக்கியமானது.
Various Source
கடலை மிட்டாயில் நார்ச்சத்து, ப்ரோட்டீன், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளது.
கடலை மிட்டாயில் உள்ள தாமிரம், துத்தநாகம் உடலின் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.
கடலையில் உள்ள விட்டமின் ஈ, ஜிங்க் ஆகியவை தோல்களில் ஏற்படும் பிரச்சினைகளை போக்குகிறது.
கடலை மிட்டாயில் அதிகமான புரதச்சத்து உள்ளதால் உடலுக்கு தேவையான புரதம் இதிலிருந்து கிடைக்கிறது.
Various Source
கடலை மிட்டாயில் உள்ள செறிவான வைட்டமின் சத்துகள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கிறது.
கடலையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.
கடலை மிட்டாயில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள், பற்களை உறுதிப்படுத்துகிறது.
கடலை மிட்டாயில் உள்ள வைட்டமின் பி3 சத்தானது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.