இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து அணி 700 ரன்களை நோக்கி இமாலய ஸ்கோரை எட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சற்றுமுன் வரையிலான நிலவரப்படி, இங்கிலாந்து அணி 155 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 659 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் 150 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் குவித்து அணியின் வலுவான ஸ்கோருக்கு உதவினர்.
இந்தியத் தரப்பில், ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
மூன்றாவது நாள் ஆட்டம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் இன்னும் முடிவடையவில்லை. இருப்பினும், இங்கிலாந்து அணி தற்போது 300 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றிருப்பதால், இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி இந்த போட்டியில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.